வெளிநாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு -15, ஜம்பட்டா வீதி பகுதியை சேர்ந்த 30 வயதான புஷ்பராஜ் விக்னேஸ்வரன் என்ற சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் மனைவியும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகம் நடாத்த முயற்சித்தமை, சட்டவிரோதமாக துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்தமை, போதைபொருள் குற்றச்சாட்டு உள்ளிட்ட விடயங்களுக்காக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாடொன்றில் தங்கியிருந்த சந்தேகநபரை, அந்நாட்டின் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இலங்கை பொலிசார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த சந்தேகநபர் நாடுகடத்தப்பட்ட நிலையில், இன்று அதிகாலை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரையும், அவரின் மனைவியையும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com