க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் இன்றைய தினம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக மன்னாரில் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மன்னார் மாவட்ட உதவி பணிப்பாளர் ரி.பூலோக ராஜா தலைமையில் மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் இடம்பெற்றது.
இதன்போது, மத தலைவர்கள், இளைஞர் யுவதிகள், கிராம மக்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிநிதிகள் இணைந்து முதியோர் இல்ல வளாகத்தில் சிரமதான பணியை முன்னெடுத்தனர்.



Link: https://namathulk.com