முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஓமானில் நடைபெறும் 08 ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டிற்கு சென்றுள்ள இருவரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு கூட்டாண்மைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை ரணில் விக்கிரமசிங்க, மற்றும் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் ஓமானில் நடைபெறும் 08 ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.
Link: https://namathulk.com