அம்பாறை, பெரியநீலாவணை பகுதியில் இயங்கிய இரண்டு மதுபானசாலைகளும் மக்களின் போராட்டத்தை தொடர்ந்து இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக மூன்று நாட்கள் முன்னெடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் வலுவடைந்த நிலையில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கிணங்க, இரண்டு மதுபானசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Link: https://namathulk.com