ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றதன் பின்னர் தயாரிக்கப்பட்ட முதலாவது வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் இன்று காலை 10.30 க்கு 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு சமர்பிக்கப்படவுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இடதுசாரி கொள்கையுடைய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், அவர்களால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பொதுமக்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன.
நாட்டில் பொருளாதார நிலை நெருக்கடிக்குள்ளான நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் தயவுடன் , மெல்ல மெல்ல நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனாலும் சாதாரண பொதுமக்களுக்கு அரசியல் இராஜதந்திரங்கள் புரியாது போனாலும், தங்களின் ஜீவனோபாயம் நிலைக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டிலேயே நாட்களை நகர்த்துகின்றனர்.
இந்நிலையில் அரசியல் சாணக்கியம் அறிந்தவர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இம்முறை வரவு செலவுத் திட்டம் அமைந்திருக்குமோ என்ற சந்தேகத்துடன் உள்ளனர்.
எவ்வாறாயினும் நாட்டு மக்களின் நலனை அடிப்படையாகக்கொண்டு வரவுசெலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவே பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இத்தனை புதிர்களுக்கும் இன்று நண்பகலுக்கு முன்னர் விடை கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் அனைத்து விடயங்களையும் நமது TV செய்தி உங்களிடம் கொண்டுவர தயாராக உள்ளது.
Link : https://namathulk.com