கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தோனேசிய கடற்படை கப்பல்

Aarani Editor
1 Min Read
இந்தோனேசிய கடற்படை கப்பல்

இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI BUNG TOMO – 357’ என்ற போர்க்கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு சிநேகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்ததுடன், இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Multirole Light Frigate ரக ‘KRI BUNG TOMO – 357’ போர்க்கப்பல் 95 மீட்டர் நீளமும் மொத்தம் 111 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் DEDI GUNAWAN WIDYATMOKO கடமையாற்றுகின்றார்.

மேலும், இந்தப் போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், கொழும்பில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிநேகபூர்வ விஜயத்தின் பின்னர், ‘KRI BUNG TOMO – 357’ கப்பல் இன்று நாட்டை விட்டுப் புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *