2023 (2024) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குரிய மீளாய்வுப் பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான, WWW.doennets.lk அல்லது WWW.results.exams.gov.lk இற்குள் பிரவேசித்து மாணவரின் பரீட்சை சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்குவதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விசாரணைகளுக்காக பின்வரும் தொலைப்பேசி இலக்கங்களின் மூலமாக, பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேற்று கிளைக்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
துரித தொலைபேசி இலக்கம் – 1911
பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு பெறுபேற்று கிளை – 011 2784208, 011 2784537, 011 2785922
தொலைநகல் – 011 2784422
Link : https://namathulk.com