ஒரு கிலோகிராம் கோதுமை மா மற்றும் ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று (18) முதல் பத்து ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக வர்த்தக, வாணிப,உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கோதுமை மாவின் விலை குறைக்கப்படுவதனால், பாண் ஒரு இறாத்தலின் விலையை குறைக்க பேக்கரி உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம், ஏனைய பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com