தற்போது நாட்டில் நிலவும் அதிக வறட்சியான வானிலை காரணமாக அத்தியாவசியமான அன்றாட செயற்பாடுகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நீரை வீண்விரயம் செய்யாது சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், வாகனங்களைக் கழுவுதல், வீட்டுத் தோட்டச் செய்கை போன்ற செயற்பாடுகளுக்காக குழாய் நீரை பயன்படுத்துவதை குறைத்து கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
Link : https://namathulk.com