இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவை இன்று சந்தித்தார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் அரசியல் உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், ரஷ்ய சுற்றுலா பயணிகளின் வருகை, இலங்கை சுற்றுலாத்துறையில் எவ்வாறு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவும் கலந்து கொண்டார்.










Link: https://namathulk.com