நல்லாட்சிக்கான தேசிய நிலையத்தின் பணிப்பாளர் நாயகமும், இந்திய பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான கலாநிதி சுரேந்திரகுமார் பாக்டே, பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
இதன்போது, நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும், பொது நம்பிக்கையை வளர்ப்பதிலும் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் திறமையான பொதுத்துறையின் முக்கியத்துவத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்
இச்சந்திப்பில், இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான திறன் விருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நல்லாட்சிக்கான தேசிய நிலையத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதனை கருத்திற் கொண்டு, நல்லாட்சிக்கான தேசிய நிலையம் மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்மொன்றும் கைச்சாத்திடப்பட்டது.



Link: https://namathulk.com