கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குள் கனேமுல்ல சஞ்சீவ என்பவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பாலாவி பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு புதுக்கடை 05 ஆம் இலக்க நீதிமன்றத்திற்குள் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கனேமுல்ல சஞ்ஜீவ என்றழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமன்ரத்ன என்ற சந்தேகநபர் உயிரிழந்தார்.
சட்டத்தரணியை போல நீதிமன்றத்திற்குள் சென்ற சந்தேகநபர் துப்பாக்கிப்பிரயோகம் நடாத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவை புத்தகத்திற்குள் துப்பாக்கியை மறைத்து வைத்து சந்தேகநபர் கொண்டு சென்றுள்ளார்.
சந்தேகநபருக்கு உதவிபுரியும் வகையில் பெண்ணொருவரும் சட்டத்தரணியை போல நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை சந்தேகநபரிடம் , குறித்த பெண் வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Link: https://namathulk.com