இலங்கை தமிழ் பத்திரிக்கை துறையில் தனித்துவம் பெற்று விளங்கும் முன்னணி பத்திரிகையான தினக்குரல் மற்றும் யாழ் தினக்குரல் பத்திரிகைகளின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.பி. சாமி காலமானார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு அன்னார் காலமாகியுள்ளார்.
சமூக சேவையாளரான அமரர் எஸ்.பி. சாமி அவர்கள் யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் 1936 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி பிறந்தார்.
நீண்டகாலமாக கொழும்பில் வசித்த அன்னார் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி சங்கத்தின் தலைவராகவும், கொழும்பு புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
யாழ் மக்களின் மருத்துவசேவையை இலகுபடுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட நோர்தன் சென்றல் தனியார் வைத்தியசாலையின் ஸ்தாபகரான எஸ்.பி. சாமி அவர்கள், இறுதிவரை வைத்தியசாலையின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
Link : https://namathulk.com