கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்த சந்தேகநபரின் பெயர் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று பாராளுமன்றத்தில் தெளிவுப்படுத்தினார்.
புத்தளம் பாலாவி பகுதியில் நேற்று கைது செய்யப்பட நபர் சமிந்து டில்ஷான் பியுமங்க கன்டனாராச்சி என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
சந்தேகநபர் கடந்த சில வாரங்களாக நடாத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டவுடன் மொஹமட் அஸ்மன் சப்ரிடீன் என்ற ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு அறிவித்தார்.
எவ்வாறாயினும் துப்பாக்கிதாரி பல பெயர்களை பயன்படுத்தியுள்ளதாக பின்னர் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com