அம்பாறை இறக்காமம் அரபாநகரில் முன்னாள் கணவனின் தாக்குதலுக்கு இலக்கான 25 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளார்.
கொலை செய்யப்பட பெண்ணின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கணவனிடம் விவாகரத்து பெற்ற நிலையில் வெளிநாட்டு பணிப்பெண்ணாக சென்றிருந்த குறித்த யுவதி, இரண்டு வருடங்களின் பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளார்.
நாடு திரும்பிய பின்னர் மற்றுமொருவரை திருமணம் முடித்துக்கொண்டு வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை குறித்த வீட்டிற்குள் புகுந்த முன்னாள் கணவர், கூரான ஆயுதத்தால் குறித்த இளம்பெண்ணை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது பலத்த காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com