கொழும்பின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன.
பாதாள உலகக் குழுவினரிடையே காணப்படும் மோதல் நிலையே இவாறான சம்பவங்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலவாக்கலை பேயாவல் தோட்டத்தை சேர்ந்த சசிகுமார் என்ற இளைஞனே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாகிதாரியும், அவரை ஏற்றிச் சென்ற மோட்டர்சைகிள் ஓட்டுநரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட சில மணித்தியாலத்திற்குள் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Link : https://namathulk.com