நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிதரத்ன , ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் துரித நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் இயங்கும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் அண்மைக்கால போக்குகள் தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் குற்றச் செயல்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சந்தேகநபர்களை கைது செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் விரைந்து செயற்படுவார்கள் எனவும் கூறினார்.
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை நாடுகடத்த தேவையான இராஜதந்திர நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிதரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
Link : https://namathulk.com