பாதாள உலகக் குழு ஒன்றின் தலைவர் என கூறப்படும் கனேமுல்ல சஞ்சீவ துபாயிலிருந்து அண்மையில் நாடு கடத்தப்பட்ட நிலையில் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 19 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றவாளி கூண்டில் கனேமுல்ல சஞ்சீவ ஏறியப்போது அங்கு சென்ற ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்திவிட்டு தப்பிச்சென்றார்.
இதன்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கனேமுல்ல சஞ்சீவ உயிரிழந்தார்.
இதன் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிசார்,அன்றைய தினமே துப்பாக்கிதாரியை கைது செய்தனர்.
அந்தவகையில் துப்பாக்கிதாரிக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து, நேற்றைய தினம் மேலும் மூன்று சந்தேகநபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கம்பஹா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் கூறியுள்ளனர்.
அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com