மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலக்கூடத்தில் குழந்தையை பிரசவித்து ஜன்னல் வழியாக வீசியுள்ளார்
எவ்வாறாயினும், சிசு காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றதாக வைத்தியாசலை பணிப்பாளர் கூறியுள்ளார்.
உயர் தரத்தில் கல்வி கற்றுவரும் 18 வயது மாணவி ஒருவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வயிற்று வலி என கூறி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மாணவியை சோதனை செய்த வைத்தியர்கள் வலி நிவாரணி மருந்து கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதிகாலை ஐந்து மணியளில் குறித்த மாணவி மலசலக் கூடத்திற்குச் சென்று குழந்தையை பிரசவித்து ஜன்னல் வழியாக வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழே விழுந்த குழந்தையின் அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்று சிசுவை மீட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
மேலும், குழந்தையை பிரசவித்த மாணவிக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த சிசுவும் தாயும் பாதுகாப்பாக இருப்பதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Link: https://namathulk.com