க்ளீன் சிறலங்கா வேலைத்திட்டத்தின ஊடாக அழகான கடற்கரை எனும் செயற்றிட்டத்தின் கீழ் நாடெங்கிலும் உள்ள கடற்கரையை சுத்தப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அவ்வகையில், க்ளீன் சிறீலங்கா வேலைத்திட்டம் யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி சக்கோட்டையில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோர் இணைந்து கொண்டனர்.
கடற்கரையோரங்களை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர், கடற்படையினர், பொலிசார், சாரணிய இயக்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் என 1,505 பேர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இந்நிகழ்வு மன்னார் மாவட்டத்திலும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரி கடற்கரை பகுதியை சூழ உள்ள கரையோரங்கள் இன்றைய தினம் முதல் கட்டமாக சுத்தப்படுத்தப்பட்டது
மன்னார் பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட செயலகம், மன்னார் நகரசபை, பிரதேச சபை, கடற்படை பொலிசார், இராணுவத்தினர் இணைந்து குறித்த சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.












Link: https://namathulk.com