அமெரிக்க நாடானது உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக, கடந்த ஒரு மாதமாக ஐநாவின் உறுப்பு நாடுகளுடன் உக்ரேனில் போர் தொடர்பான தங்கள் சொந்த தீர்மானத்தைப்பற்றிப் பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறது
அமெரிக்காவின் யுத்த நிறுத்தம் தொடர்பான திட்ட வரைபு கடந்த வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் தனது தீர்மானத்தை ஆதரிக்கவும், எந்தவொரு திருத்தத்தையும் எதிர்க்கவும், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளால் தயாரிக்கப்பட்ட திட்ட வரைபிற்கு ஆதரவளிக்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
“ஒரு எளிய யோசனையை மையமாகக் கொண்ட ஒரு முன்நோக்குத் தீர்மானமென்பது போரை முடிவுக்குக் கொண்டுவருதலாகும். இந்தத் தீர்மானத்தின் மூலம், உறுப்பு நாடுகள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உருவாக்க முடியும். இதைப் பராமரிப்பதே ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய நோக்கமாகும்” என்று அமெரிக்கா தனது தீர்மானத்தை முன்வைத்துள்ளது.
மேலும் “வேறு எந்தத் தீர்மானத்திற்கும் அல்லது சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களுக்கும் ஆதரவளிக்க வேண்டாம்” என்றும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கத் திட்ட வரைபுத் தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட பல திருத்தங்கள் மீது பொதுச் சபை வாக்களிக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link : https://namathulk.com