உக்ரைனின் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் “வான்வழி பயங்கரவாதத்தை” கண்டித்து, உக்ரைனின் நட்பு நாடுகளிடையே ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
“ஒவ்வொரு நாளும், நமது மக்கள் வான்வழி பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கிறார்கள்” என்று அவர் தனது X தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதன் காரணமாக ரஷ்யாவானது உக்ரைன்மீது ஒரே இரவில் 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.
கடந்த வாரத்தில் உக்ரைன்மீது கிட்டத்தட்ட 1,150 ட்ரோன்கள், 1,400 க்கும் மேற்பட்ட வான்வழிக் குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான 35 ஏவுகணைகள் ரஷ்யாவால் ஏவப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைனின் வான் பாதுகாப்பைச் செயல்படுத்துபவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, உக்ரைனின் நட்பு நாடுகளை “நியாயமான மற்றும் நீடித்த அமைதியைப்” பாதுகாப்பதற்கு ஒற்றுமையாக நிற்க அழைப்பு விடுத்துள்ளார்.
Link : https://namathulk.com