மலையகத்தில் உள்ள கலைஞர்களுக்கான கௌரவிப்பு விழாவை, இந்துகலாச்சார புத்த சாசன அமைச்சில் கலந்துரையாடி இதனை அரச விழாவாக மலையகத்தில் நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சிற்ப, செதுக்கள், ஒவிய கலைஞர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்த கலைஞர்களின் கௌரவிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள், அதிபர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மலையகத்திற்கு அரசியல் மாற்றமென்பது முக்கியமானது எனவும் அந்த மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளதாக்கவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
மலையக பெருந்தோட்டமக்கள் 14 மாவட்டங்களில் வாழ்ந்து வருவதாகவும், இந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவேண்டியது அரசாங்கத்தின் முக்கிய கடப்படாக உள்ளது எனவும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
Link : https://namathulk.com