மஸ்கெலியா நல்லத்தண்ணி காட்டுப்பகுதியில் பரவிய தீயை கட்டுப்படுத்த இலங்கை விமானப் படையின் பெல் 412 ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இலங்கை விமானப்படை தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
விமானப் படையினரின் முழு முயற்சி காரணமாக நல்லதண்ணி காட்டுப் பகுதியில் பரவிய தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் பத்து ஏக்கர் காட்டுப் பகுதி தீக்கிரையாகியுள்ளது.
மஸ்கெலியா லக்சபான தோட்டத்தை அண்மித்த வண்ணத்துப்பூச்சிகளின் இயற்கை அமைவிடம் பகுதியிலேயே தீ பரவியுள்ளது .
மலையகத்தில் நிலவும் கடும் வறட்சியான வானிலையால் தீ வேகமாக பரவியதாக எமது செய்தியாளர் கூறினார்.
Link : https://namathulk.com