ரணிலுடன் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டார் மஹிந்த ராஜபக்ச

Aarani Editor
2 Min Read
வழிபாடு

நாட்டில் அரசியல் ரீதியான இடர்பாடுகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பொருளாதார நெருக்கடிக்கும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினார்

இந்நிலையில் தேர்தல் வைத்து அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலையில் பல அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் போட்டி தன்மையும் நிலவியது.

இருந்த போதிலும் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாததன் காரணமாக ஜனாதிபதி பதவியை ஏற்க பலர் பின்வாங்கினர்

இருந்தபோதிலும் எவ்வித வாக்குகளும் இன்றி தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு சென்ற ரணில் விக்ரமசிங்க ஆட்சியை பொறுப்பேற்று ஜனாதிபதியாக பதவியேற்றார்.

ஆட்சி கவிழ்புக்கான போராட்டங்கள் கொழும்பு காலி முகத்திடலில் வலுப்பெற்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஆட்சி மாற்றம் இடம்பெற்றது பலர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ராஜபக்ஸ குடும்பத்தினரின் பிரதிநிதியாகவே ரணில் விக்ரமசிங்க ஆட்சியை பொறுப்பேற்று இருப்பதாகவும் அது ரணில்-ராஜபக்ச அரசாங்கம் எனவும் பலர் தங்களுடைய விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.

எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்று சுமார் இரண்டு வருடங்களின் பின்னரே ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது .

மஹிந்த ராஜபக்சவிற்கும் தனக்கும் எவ்வித அரசியல் ரீதியான தொடர்புகளும் இல்லை என ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.

இரண்டு வருடங்களின் பின்னர் தேர்தல் நடைபெற்று இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏறியது

இந்த பின்னணியில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும் வழிபாடுகளில் ஈடுபடும் நிழற்படங்கள் தற்போது பகிரப்பட்டு இருக்கின்றன.

இதனூடாக இவர்கள் இருவரும் மீண்டும் கூட்டு சேர்ந்துள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது

எனினும் இந்த விடயம் குறித்து நமது டிவி ஆராய்ந்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் அதற்கான பதில் கிடைத்தது.

குருநாகல் மாவட்டத்தில் காணாப்படும் உமந்துவ பௌத்த கிராமத்தில் உள்ள சுரங்க விகாரைக்கு மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பிரமுகர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசியாவில் குகை விகாரைக்கு மேலே நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்த பகவானின் மிக நீண்ட சயன நிலை சிலையும் இதன்போது இவர்களால் திறந்து வைக்கப்பட்டதாக மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

மத வழிபாடுகள் நடாத்தப்பட்ட இடத்தில் ஒன்றுகூடிய முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும், அரசியல் விடயங்கள் பேசியிருப்பார்களோ என்பதே அனைவரினதும் சந்தேகமாக காணப்படுகிறது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *