வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட ஊனமுற்றோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்ற சபை அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
பிறப்பிலிருந்து விசேட தேவையுடைய நபர்கள் தொடர்பில் கரிசனை காட்டும் அதேவேளை, உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டு ஊனமுற்றோர் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என இரா.சாணக்கியன் கூறியுள்ளார்.
இவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Link : https://namathulk.com
