11 ஆண்டுகளின் முன்னர் காணாற்போன MH370 மலேசியா ஏயார்லைன்ஸ் விமானம் உலகின் நீடித்த மர்மங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது.
மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மார்ச் 2014 இல் பயணத்தை ஆரம்பித்த MH370 விமானமானது சிறிது நேரத்திலேயே ராடர் இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.
இவ்விமானமானது 12 பணியாளர்கள் மற்றும் 227 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு தனது பயணத்தை ஆரம்பித்தது.
கடைசியாக மலாக்கா நீரிணைக்கு மேற்கே செல்லும் இராணுவ ரேடாரில் குறித்த விமானத்தின் தொடர்பு காணப்பட்டது.
அரை மணி நேரத்திற்குப் பிறகு, விமானத்துடனான தொடர்பை இழந்ததாக விமான நிறுவனம் அறிவித்தது,
குறித்த விமானமானமானது இன்றுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், விமானம் காணாமல் போனதற்கான காரணமும் இன்றுவரை அறியப்படவில்லை.
இந்த நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணியை ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேடுதல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தொடர்பில் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
Link: https://namathulk.com