இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தி, அதனை ஒளிபதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தமை தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கேகாலை பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரும், அதனை ஓளிபதிவு செய்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
16,17 வயதான மூன்று பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
Link: https://namathulk.com