சட்டவிரோத உறுப்பு விற்பனை ஆசியா முழுவதும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
உள்நாட்டுப் போரின் காரணமாக மியன்மார் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டின் இராணுவப் புரட்சிக்குப் பிறகு பொருட்களின் விலைகள் பாரிய அளவில் உயர்வடைந்தன.
இந்த நிலையில் மியன்மாரில் இருப்பவர்களில் பலர் தங்களுடைய உறுப்புக்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய இந்தியாவிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
மியான்மர் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் மனித உறுப்புகளை வாங்குவது அல்லது விற்பனை செய்வது சட்டவிரோதமானது.
ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு மியான்மரில் வேலையின்மை அதிகரித்துள்ளது.
மியன்மாரில் 2017 ஆம் ஆண்டில், மக்கள்தொகையில் கால் பகுதியினர் வறுமையில் சிக்கியதாகவும், 2023 ஆம் ஆண்டில், இந்தத் தொகை பாதியாக உயர்ந்துள்ளது என்று ஐ நா. வின் மேம்பாட்டு நிறுவனமான யுஎன்டிபி தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளுக்கு அமைய, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 2010 முதல் உலகளவில் 50% விட அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 150,000 பேர் இதனை மேற்கொள்வதாகவும், ஆனால் உறுப்புகளின் வழங்கல் உலகளாவிய தேவையில் சுமார் 10% மட்டுமே பூர்த்தி செய்கிறது என்றும் கூறப்படுகிறது.
நேபாளம், பாகிஸ்தான், இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் உட்பட ஆசியா முழுவதும் சமீபத்திய ஆண்டுகளில் வறுமையால் இயக்கப்படும் சட்டவிரோத சிறுநீரக விற்பனை இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இந்திய மருத்துவர் மற்றும் அவரது உதவியாளர் உட்பட சிறுநீரக மோசடி தொடர்பாக ஏழு பேரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Link: https://namathulk.com