118 ஆவது வடக்கின் பெரும்போர் கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது.

Aarani Editor
1 Min Read
Battle of The North

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த வடக்கின் பெரும்போர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் கலந்துக் கொள்ளும் வீரர்கள் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் , ரசிகர்களும் , பார்வையாளர்களும் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

இம்முறை வெற்றிக்கிண்ணத்தை சுவீகரிக்கப் போகும் அணி எது என்ற கேள்விக்கு நாளை பதில் கிடைக்கும் என்ற அவாவில் இருந்தவர்களுக்கு, இயற்கை வேறு விதத்தில் பதில் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், சென்ஜோண்ஸ் கல்லூரிக்குமிடையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவிருந்த 118 ஆவது வடக்கின் பெரும்போர் கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது.

இந்த போட்டியை இன்றும், நாளையும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் மார்ச் மாதம் 06,07,08 ஆம் திகதிகளில் இந்த போட்டிகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு வாரம் போட்டிகள் பிற்போடப்பட்டாலும் , விளையாட்டு இரசிகர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளவே இல்லை.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *