கொழும்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் ரயில் போக்குவரத்தை அதிகளவானோர் பயன்படுத்துகின்றனர்.
அதிலும் கரையோர மார்க்கத்திலான ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் கரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து இன்று தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் சிதைவடைந்துள்ளமையால் தாமதம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com