அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து பாலினங்கள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.
இது பரவலாக அனைவரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், திருநங்கைகளைக் கொண்ட அமெரிக்க இராணுவ வீரர்கள் அடையாளம் காணப்பட்டு பதவி விலக வேண்டுமென பென்டகன் தெரிவித்துள்ளது.
திருநங்கையாக இருப்பது சேவைக்கு பொருந்தாது எனவும் 60 நாட்களுக்குள் சேவையிலிருந்து இவர்களை நீக்குவதை முன்னறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த புதன்கிழமை பென்டகன் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது
திருநங்கை உறுப்பினர்கள் விலக்கு பெறாவிட்டால் அமெரிக்க இராணுவத்திலிருந்து அவர்கள் பிரிக்கப்படுவார்கள் எனவும் மேலும் அவர்கள் ஆயுதப்படைகளில் சேரவோ அல்லது பணியாற்றவோ தடை விதிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com
