மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமைகளால் கிரிப்டோ நாணயம் மீது புதிய அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்க ஈரான் தயாராகிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தேசிய நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் ஈரானிய அதிகாரிகள் மீண்டும் கிரிப்டோகரன்ஸிகள் மற்றும் அதன் இணைய பரிமாற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த மாதம், ஈரானின் மத்திய வங்கி அனைத்து கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களிலும் ரியால் கொடுப்பனவுகளை திடீரென்று இடை நிறுத்தியது,
இதனால் 10 மில்லியனுக்கும் அதிகமான கிரிப்டோ பயனர்களால் பிட்காயின் மற்றும் பிற உலகளாவிய இணைய நாணயங்களில் ரியாலை செலவிட முடியாத நிலை காணப்பட்டது.
ஈரானிய பொருளாதாரம் பல ஆண்டுகளாக 40 சதவீதத்திற்கும் அதிகமான பணவீக்க வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய கொடுப்பனவு முறையிலிருந்து விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Link : https://namathulk.com