மலையாள மொழியில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்த ‘ரைஃபிள் கிளப்’ படத்தின் மூலம், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் வாணி விஸ்வநாத்.
ஆக்ஷன் படங்களுக்கு தெலுங்கில் விஜயசாந்தி போல மலையாளத்தில் புகழ்பெற்றவரே வாணி விஸ்வநாத்.
125 படங்களுக்குமேல் கதா நாயகியாக நடித்த இவர் தமிழில் ‘பூந்தோட்ட காவல்காரன்’, ‘நல்லவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
‘பாராமல் பார்த்த நெஞ்சம்… ஜம் ஜம் ஜம்!’ பாடலால் எல்லோராலும் நினைவுகூரப்படும் இவர் நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
“நடிகர் விஜயகாந்தைப் பார்த்துதான் ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வம் வந்தது!” என்று தன்னுடைய அனுபவங்களை ரசிகர்களிடம் வாணி விஸ்வநாத் பகிர்ந்துகொண்டுள்ளார்.
Link : https://namathulk.com