துப்பாக்கிச் சூட்டின் போது நெஞ்சு,கழுத்து, வயிறு ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட காயம் காரணமாகவே கனேமுல்ல சஞ்சீவ உயிரிழந்துள்ளார் என கொழும்பு பிரதம நீதவான் அறிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இன்று நீதிமன்றத்திற்கு இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இரகசிய அறிக்கையின் அடிப்படையில் கொழும்பு பிரதம நீதவானால் சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பாதாள உலகக் குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ , துபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த 19 திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றவாளி கூண்டில் கனேமுல்ல சஞ்சீவ ஏறியப்போது அங்கு சென்ற நபரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் துப்பாக்கிதாரிக்கு உதவியதாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
Link : https://namathulk.com