திருகோணமலை, மூதூர் இருதயபுரம் பகுதியில் பஸ் ஒன்றும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அம்பாறையிலிருந்து சாரதி உதவியாளர் உட்பட, இருவருடன் திருகோணமலை நோக்கி பயணித்த லொறியும் கம்பஹா – வெயாங்கொட பகுதியிலிருந்து பயணித்த பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்களும், பெண்களும் உள்ளடங்குவதாக பொலிசார் கூறினர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
Link : https://namathulk.com