யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிகண்டி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த மணல் டிப்பர் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த மணல் டிப்பரில் இருந்து ஒரு தொகை கஞ்சா பொதியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
மணல் டிப்பரில் போதைப்பொருள் கடத்துவதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கட்டளையை மீறி பயணித்த டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.