உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் வலுபெற்று வரும் நிலையில், தமது நாட்டிற்கு நிரந்தர அமைதி தேவை என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தி வருகிறார்.
தமது நாட்டின் அமைதிக்காக ஜனாதிபதி பதவியையும் இராஜினாமா செய்ய தயார் என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் உலக நாடுகளை தம்முள் அடக்க எதிர்பார்க்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றைய தினம் உக்ரைன் ஜனாதிபதியையும் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் பின்னர் உக்ரைன் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், டிரம்ப்புடனான கருத்து மோதல் “இரு தரப்புக்கும் நல்லதல்ல” என கூறியுள்ளார்.
உக்ரைனின் அரிய கனிமங்களை அமெரிக்காவிற்கு அணுகுவதற்கான ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திடுவதற்கான முன்னோடியாக கருதப்படும் நிலையில், இரு நாட்டு தலைவர்களும் ஊடகங்களுக்கு முன்னமர்ந்து ஒருவரை ஒருவர் சாடிக்கொல்வது சிறந்ததல்ல என தெரிவிக்கப்படுகிறது.
இருநாட்டு தலைவர்களின் சந்திப்பின் போது அரசியல்வாதிகளுடன் அமர்ந்திருந்த அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் , இராஜதந்திரத்தின் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஜெலென்ஸ்கியிடம் கூறியதை அடுத்து கருத்து மோதல் ஏற்பட்டது.
இதன்போது உக்ரைன் ஜனாதிபதி வழங்கிய பதிலுள் ஆத்திரமுற்ற அமெரிக்க ஜனாதிபதி காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதற்கான காணொளி ஊடகங்களில் பகிரப்பட்டதை அடுத்து ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
“உக்ரைனில் உள்ள மக்கள் தாங்கள் தனியாக இல்லை என்பதையும், அவர்களின் நலன்கள் ஒவ்வொரு நாட்டிலும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன என்பதையும் அறிந்து கொள்வது முக்கியம்,” என உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், போலந்து மற்றும் நெதர்லாந்தின் தலைவர்கள் உக்ரைனை ஆதரித்து சமூக ஊடகங்களில்
செய்திகளை பகிர்ந்துள்ளனர்.
இவர்களின் ஆதரவிற்கு ஜெலென்ஸ்கி ஒவ்வொருவருக்கும் நேரடியாகப் பதிலளித்து அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.