சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 02 ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தேசிய மகளிர் வாரமாக அறிவித்துள்ளது.
வலிமையானவள் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பாதையாக இருப்பாள் எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்களின் ஆரோக்கியம், விழிப்புணர்வு, பாதுகாப்பு, அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஆதரிப்பதற்காக அவர்களின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி நாடு தழுவிய திட்டங்கள் தொடராக செயல்படுத்தப்படவுள்ளன.
பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கும் அவர்களின் தயாரிப்புகளுக்கு ஒரு சந்தையை உருவாக்குவதற்கும், ‘லிய சக்தி’ மகளிர் கண்காட்சி மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெறும்.
இந்த ஆண்டு மகளிர் தின கொண்டாட்டம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெறும்.
இந்த நிகழ்வு பத்தரமுல்லையில் உள்ள ‘சுஹுருபாய’ கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com