காலி, பத்தேகம பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த 27ஆம் திகதி குறித்த பகுதியில் நடந்த இறுதிச் சடங்கின் போது, இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதன்போது, கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.
இந்த விடயம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com