இரத்தினபுரி, குருவிட்ட பகுதியில் மரத்தில் மோதுண்டு வேன் விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட, 14 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் கூறினர்.
வேனின் சாரதி உள்ளடங்களாக 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com