இணையம் வழியாக இலங்கைக்கு வருமானத்தை பெற்றுக்கொடுப்போர் மீதான வரி விதிப்பு பிழையான தீர்மானம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சொந்த முயற்சியில் நாட்டிற்கும் வருமானத்தை கொண்டுவரும் அவர்களுக்கு அரசாங்கத்தால் எவ்வித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே வஜிர அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நிதி ஈட்டும் இளைஞர்கள் மீது வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் அந்த வருமானத்தை வேறு வழிகளில் கையாள முடிவு செய்யக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
Link : https://namathulk.com