பொலிஸ் இடமாற்றங்களில் தலையீடுகள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முன்வைத்த குற்றச்சாட்டை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.
இந்த நிராகரிப்பு தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றையும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
பதில் பொலிஸ் மாஅதிபரின் பதவிக்காலத்தில் அனைத்து இடமாற்றங்களும் உரிய நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடமாற்ற அதிகாரங்களை தடுத்து நிறுத்தியதன் மூலம்,பொலிஸ் நடவடிக்கைகளுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு இடையூறு விளைவிப்பதாக பதில் பொலிஸ் மாஅதிபர் ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கும் வகையில் இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com