உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் இம்மாதம் 03ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது.
இதன்படி, எவ்விதத்திலும் இத்திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்க முடியும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com