நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 44 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சேனநாயக்க சமுத்திரம், மகாகங்கராவ, நுவரவாவி, மகாவிலச்சிய, மல்வத்து ஓயா, ருக்கம் குளம், லுணுகம்வெஹெர, பகிரிய, வீரவில, கிரிந்தி ஓயா, மாணிக்க கங்கை மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து தற்போது கணிசமான அளவு நீர் ஆற்றை சென்றடைக்கின்றது.
எனவே, குறித்த நீர்த்தேங்கங்களை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்று நீரைப் பயன்படுத்தும் போது விழிப்புடன் செயற்படுமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் நாட்களில் வறட்சி நிலவும் என எதிர்பார்க்கப்படுவதனால், நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டிய அவசியம் குறைவடையும் எனவும் நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Link : https://namathulk.com