குருநாகல் குளியாப்பிட்டிய புதிய தொழில்நுட்ப தேசிய கல்வியியற் கல்லூரியின் முதல் பயிற்சிக் குழு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கல்லூரியைக் கட்டுவதற்கான பணிகளுக்கு கொரிய அரசு 2,898 மில்லியன் டொலர்களும், இலங்கை அரசு 1,112 மில்லியன் டொலர்களும் ஒதுக்கியுள்ளன.
இதற்காக செலவிடப்பட்ட மொத்த செலவு 3,510 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.






