சிங்கப்பெண்களின் தன்னிகரற்ற சக்திக்கான அங்கீகாரமாய் லிய சக்தி 2025

Aarani Editor
1 Min Read
கண்காட்சி

பெண்களின் சுயதொழில் முயற்சியாண்மை ஊடாகக் கட்டியெழுப்பப்படுபவை எனும் திட்டத்தின் கீழ் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் லிய சக்தி 2025 பெண்களின் உற்பத்தி கண்காட்சி மற்றும் விற்பனை சந்தை மார்ச் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மு.ப. 6 மணி முதல் பி.ப. 10 மணி வரை கொழும்பு 7 விகாரமகா தேவி வெளியரங்கில் நடைபெறும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பெண்களின் சுய தொழில் முயற்சியாண்மையின் உற்பத்தி மற்றும் சேவைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நுழையச் செய்யும் நோக்கில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது .

விற்பனைக் கண்காட்சியில் ஆடைகள், துணி வகைகள் மற்றும் பாதணிகள் உட்பட பல்வேறு உற்பத்திகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *