நுவரெலியா, நோர்வூட் விளையாட்டு மைதானம் இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது
ஆனால் தற்போது அந்த விளையாட்டு மைதானத்தில் நோர்வுட் பிரதேச சபையினை இயங்க செய்வதற்கான முயற்சிகள் வெறும் முட்டாள்தனமான காரியம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று அபிவிருத்தி குழு கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1700 ஆக அதிகரிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்தது, அதற்கு இன்றுவரை ஒரு முடிவில்லை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர், இவ்வாறான பல முக்கிய விடயங்களை செயற்படுத்தாமல் விளையாட்டு மைதானத்தில் நோர்வுட் பிரதேச சபையினை இயங்க செய்வதற்கான முயற்சிகள் ஒரு வேடிக்கையான சம்பவம் எனவும் கூறினார்.
Link: https://namathulk.com