நுவரெலியா, புசல்லாவை, மெல்போர்ட் தோட்டத்தில் நேற்று குளவிக்கொட்டுக்கு இலக்காகி எட்டு தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் புசல்லாவை, வகுகப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மெல்போர்ட் தோட்டத்தில் சில மாதங்களுக்கு முன்னர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com