யாழ்ப்பாணம் வந்திராயன் கடற்கரையில், இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நடாத்திய விசேட தேடுதலில், 174 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கடலோர வலயத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 69 மில்லியன் ரூபாவை விட அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் விசேட அதிரடி படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com